தமிழக சட்டப்பேரவை வரும் 8ம் தேதி கூட உள்ள நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு விடப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில், ஜனவரி 8ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டம் பற்றியும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

