திமுக தலைவர் கருணாநிதி நன்கு உடல் நலம் தேறி வருவதாக அவரது மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலிலிருந்து விலகி தமது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். நீண்ட நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்த அவர் முரசொலி பவள விழா அரங்கை பார்வையிட்டது தொண்டர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. இந்நிலையில் சென்னை சிஐடி காலனியில் உள்ள தமது துணைவியார் ராஜாத்தியம்மாள் வீட்டிற்கு கருணாநிதி சென்றார். அப்போது அவரை அவரது மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். அப்போது அவருடன் ராஜாத்தியம்மாளும் உடன் சென்றார். இதனிடையே கருணாநிதி நன்கு உடல் நலம் தேறி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கனிமொழி தெரிவித்தார்.

