ஹஜ் பயணத்திற்கான மானியத்தை தொடர்ந்து வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தப்போவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெறும் மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழகத்தின் கோரிக்கைகளை எடுத்துரைக்க உள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம், ஹஜ் பயணத்திற்கான மானியத்தை தொடர்ந்து வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தப்போவதாக தெரிவித்தார்.

