தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கடந்த ஒரு மாதமாக ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கால், ஏராளமான பகுதிகளில் பாதுகாப்பு கம்பிகள் உடைந்து காட்சியளிக்கின்றன.
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஒகேனக்கல் அருவிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டது. கடந்த ஒரு மாத காலமாக அருவியே தெரியாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. தற்போது மழைகுறைந்ததால் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில் ஒரு மாதமாக நீடித்த வெள்ளப்பெருக்கால், சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்லும் நடைபாதையின் பாதுகாப்பு கம்பிகள் ஆகியவை நீரில் அடித்துச்செல்லப்பட்டன. இதுதவிர, பிரதான அருவி பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் மற்றும் தடுப்புக் கம்பிகள், முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

