வணிகர்களின் கோரிக்கையை ஏற்று, ஜி.எஸ்.டி.யில் மாற்றம் கொண்டுவரப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற தொழில் சீர்திருத்தங்கள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் எளிதாக தொழில் செய்வதற்கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சீர்திருத்தத்தை உலக வங்கியும் அங்கீகரித்துள்ளதாக தெரிவித்தார். வணிகர்களின் கோரிக்கையை ஏற்று, ஜி.எஸ்.டி. வரியை ஆய்வு செய்ய உள்ளதாக கூறிய பிரதமர் மோடி, 3 மாதங்களில் தேவையான மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஹிமாச்சல் பிரதேசத்தில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பிரதமர், கட்சி தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டதால், மாற்று கட்சிகளில், துடிப்பான தலைவர்களை காங்கிரஸ் தேடிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

