ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினிக்கு பரோல் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினிக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும், ராஜூவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7பேரையும் விடுதலைச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த முத்தலாக் தடுப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறாது என கருதுவதாக தெரிவித்த அவர், மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைத்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜகவின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்றும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும் மாநகராட்சிகளில் துப்பரவு பணியாளர்கள் நியமிக்க படவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

