டெல்லி அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துக்கொண்டு பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், வரலாற்று சிறப்பு மிக்க காங்கிரசின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சிக்குரியது என்று தெரிவித்தார். மேலும் ராகுல்காந்திக்கு தமிழ்நாட்டில் சென்னை அல்லது தமிழகத்தின் மத்திய பகுதியில் பிரமாண்ட பாராட்டு கூட்டம் நடத்தப்படும் என்றும் இந்த கூட்டத்துக்கு அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைப்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
2017-12-17

