மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் மாற்றி அமைக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
60 உறுப்பினர்களை கொண்ட மேகாலயா சட்டசபைக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ். கருத்துகளை எதிர்த்து போராடி வருவதாகவும் பெண்களை அதிகாரம் இழக்கச் செய்வதே ஆர்எஸ்எஸ் – ன் நோக்கம் என்றும் குற்றம்சாட்டினார். மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

