உழவர் திருநாளை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. 1000 காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியை இந்த போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். இந்த போட்டியில் 1,241 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்க நாணயம், மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள், பீரோ, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. முதலமைச்சர் வருகையையொட்டி மதுரை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக மதுரை அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ், மாடு பிடி வீரர்களுக்கான உறுதிமொழியை வாசித்தார். இதனைத் தொடர்ந்து வாடி வாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து சீறி வந்த காளைகளை இளைஞர்கள் ஆவேசத்துடன் ஆர்ப்பரிப்புடன் அடக்கி பரிசுகளை வென்றனர்.
இதே போன்று திருச்சி சூரியூரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 மாடி பிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு சுற்றுக்கும் 150 காளைகள் என 4 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு .களமிறக் கப்பட்டது. திருச்சி, புதுக்கோட்டை ,தஞ்சை, காரைக்குடி அதனை அருகாமையில் மாவட்டங்களில் உள்ள காளைகள் இந்த போட்டியில் பங்கேற்றன .போட்டியில் வெற்றி பெற்றவீர்ர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

