மகாராஷ்டிரா மாநிலத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்; எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு ……..

மகாராஷ்டிரா மாநிலத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து, சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மதவாத சக்திகளும் சாதிவெறி சக்திகளும் ஒன்றிணைந்து தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதில் தலித் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதையும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்தாமல் மகாராஷ்டிராவை ஆளும் பாஜக அரசு வகுப்புவாதிகளுக்கு ஊக்கமளித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறையைக் கண்டித்து இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவை ஆளும் பாஜக அரசாங்கம் வகுப்புவாதிகளைக் கட்டுப்படுத்தவோ கைது செய்யவோ நடவடிக்கை எடுக்கமால் நீதிக்கேட்டுப் போராடும் தலித் மக்களைக் கலவரக்காரர்கள் என சித்திரிப்பதிலேயே கவனமாக உள்ளதாகவும், இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாகவும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் எச்சரித்துள்ளார். புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிரா மாநிலத்தில் வீரமோடு போராடும் தலித் மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் விதமாகவும், வகுப்புவாத சக்திகளை கண்டித்தும், இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

· மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மதவாத சக்திகளும், சாதிவெறி சக்திகளும் ஒன்றிணைந்து தலித் மக்கள் மீது தாக்குதல்

· இந்த தாக்குதலில் தலித் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 100க்கும் மேற்பட்டோர் காயம்

· பாஜக அரசு வகுப்புவாதிகளுக்கு ஊக்கமளித்து வருகிறது

· மகாராஷ்டிரா மாநிலத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து, இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

· பாஜக அரசாங்கம் வகுப்புவாதிகளைக் கட்டுப்படுத்தவோ கைது செய்யவோ நடவடிக்கை எடுக்கமால் நீதிக்கேட்டுப் போராடும் தலித் மக்களைக் கலவரக்காரர்கள் என சித்திரிக்கிறது

* தலித் மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் விதமாகவும், வகுப்புவாத சக்திகளை கண்டித்தும், சென்னையில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *