பெட்ரோல், டீசல் விலையை டெல்லி மாநில அரசு குறைக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் விஜய் கோயல், மாட்டு வண்டியில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு 2 ரூபாய் 50 காசுகள் குறைத்துள்ளது.
இதேபோல் மாநில அரசுகளும் குறைக்க மத்திய அரசு வலியுறுத்தியது. இதை ஏற்று பல்வேறு மாநிலங்கள் விலையைக் குறைத்துள்ளன. ஆனால் டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசு விலையைக் குறைக்கவில்லை. இதைக் கண்டித்து மத்திய திட்ட அமலாக்கத்துறை இணை அமைச்சர் விஜய் கோயல் மாட்டு வண்டியில் சென்று, டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது உடன் சென்ற பா.ஜ.க. தொண்டர்கள், பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

