கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் ஒரு வாரக் காலத்தில் 46பேருக்குப் பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூக்கில் நீர்வடிதல், உடல்வலி, சோர்வு உள்ளிட்டவை பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.
பெங்களூரில் செப்டம்பர் 29முதல் அக்டோபர் 5வரையான ஒருவாரக்காலத்தில் மட்டும் 46பேருக்குப் பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மகாதேவபுரத்தில் அதிகம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் 150பேருக்கு டாமிப்ளூ மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாக பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தின் சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.
கொசுப்புழுக்கள் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை அழிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாகப் பெங்களூர் சுகாதார அதிகாரி சீனிவாசா தெரிவித்துள்ளார்.

