புதிய இந்தியாவைக் கட்டமைக்க விஞ்ஞானிகள் பெரும் பங்காற்ற வேண்டும் ; பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல்…..

புதிய இந்தியாவைக் கட்டமைக்கப் அறிவியல் தொழில்நுட்பத் துறையினர் பெரும் பங்காற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இயற்பியலாளர் சத்தியேந்திர நாத் போசின் 125ஆவது பிறந்த நாள் விழா கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த விழாவை டெல்லியில் இருந்தபடியே காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் அறிவியல் தொழில்நுட்பத்துறையில் உள்ளவர்கள் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டுப் புதிய இந்தியாவைக் கட்டமைக்கப் பங்காற்ற வேண்டும் எனக் தெரிவித்தார். மேலும் அறிவியலை மக்களிடம் கொண்டுசெல்வதற்கான கருவியாகத் தாய்மொழியைப் பயன்படுத்துமாறு அறிவியலாளர்களைப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *