பழனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் இமயமலையின் 6 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள சிகரத்தில் தேசியக் கொடியை ஏற்றி சாதனை படைத்துள்ளார். அகில இந்திய அளவில் நடைபெற்ற என்சிசி மாணவர்களுக்கான இமயமலை ஏறும் பயிற்சிக்கு 11 பேர் தேர்வாகினர். இதில் தமிழகத்தில் இருந்து பழனி, பழனியாண்டவர் கலைக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர் நிரஞ்சன் தேர்வானார். இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மலையேறும் பயிற்சியில் பங்கேற்றனர்.
பின்னர் வெற்றிகரமாக 6 ஆயிரத்து167 மீட்டர் உயரம் உள்ள சிகரத்தில் ஏறி, அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றினர். சாதனை படைத்த மாணவர் நிரஞ்சனுக்கு கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

