பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் செய்த பெரிய தவறை ஒப்புக்கொண்டு, பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைக்க மோடி முயற்சிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பொருளாதார நிலையை சுட்டிக்காட்டுபவர்கள் கூறியதைவிட சமூகத்தில் பலவீனமாக இருந்தவர்களையும், தொழில்களையும் அதிகம் பாதித்துள்ளது என்று தெரிவித்தார். மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முன்வைத்து செய்த அரசியலுக்கான தருணம் முடிந்துவிட்டதாக தான் உறுதியாக நம்புவதாக தெரிவித்த மன்மோகன் சிங், பிரதமர் மோடி, தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு, பொருளாதாரத்தை அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் கட்டமைக்க வேண்டிய தருணம் இதுவாகும் என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட நாளான நவம்பர் 8 ஆம் தேதியை, கருப்பு தின நாளாக அனுசரிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2017-11-07

