நோயை குணப்படுத்த யோகா சிறந்த உடற்பயிற்சி என்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா அட்கூர் கிராமத்தில் ஸ்வேர்ணா பாரத் அறக்கட்டளை மருத்துவ முகாமை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், மக்களின் வாழ்க்கை பயணத்தில் சுகாதார பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும், நோயை வெல்வதற்கு யோகா சிறந்த பயிற்சி என்று தெரிவித்தார். மேலும் சமூக அமைப்புகள், அறக்கட்டளைகள் ஏழைகளுக்கு சுகாதார சேவைகளை வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
2017-11-06

