நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலுக்கும் வாய்ப்பு – மு.க.ஸ்டாலின் பேச்சு

வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

துறையூர் திமுக எம்எல்ஏ ஸ்டாலின் குமாரின் திருமணம், இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தை நடத்தி வைத்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது, மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்த, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வருவதாக அவர் கூறினார்.

அதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை தன்னை சந்திக்க இருப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் தி.மு.க.வுடன் கரம்கோர்த்து அரசியல் பணியாற்ற ஆர்வம் காட்டி வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *