நடிகர் ரஜினிகாந்தின் மதவாத அரசியலை ஏற்க முடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி எழுதிய டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும், புத்தக காதலும் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், மற்றும் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் இவ்விழாவில் பேசிய எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் ஆபத்தானது என்று தெரிவித்தார். மேலும் ரஜினிகாந்த் ஆட்சியை நிறுவினால் அது ஆர்.எஸ்.எஸ் ஆட்சியாக தான் இருக்கும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் ரஜினிகாந்தின் மதவாத அரசியலை ஏற்க முடியாது என்றும், ரஜினிகாந்தை மதவாதசக்திகள் இயக்குவதாகவும் குற்றம் சாட்டினார்.

