பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டிடிவி தினகரன் மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் போது தமது ஆதரவு அவருக்கு உண்டு என்று தெரிவித்தார். மேலும் நடிகர் கமல்ஹாசனும், ரஜினியும் காய்ந்து போன கருவாடு என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்கள் இருவரையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் தனியரசு தெரிவித்துள்ளார். சுயமான முடிவு எடுக்க முடியாத நிலையில் அதிமுக ஆட்சி இருந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
2018-01-08

