வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து நாடு முழுவதும் பனிக்காலம் நிலவி வருகிறது. வட மாநிலங்கள் மற்றும் கிழக்கு மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் கேரள எல்லை பகுதிகளில் குளிர் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கான முன்கணிப்பு வானிலை அறிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டது. அதில் ‘இரண்டு வாரங்களுக்கு தென் மாநிலங்களுக்கு மழை இல்லை என்றும், தென் இந்திய பகுதியில் அந்தமான் தீவுகளில் மட்டும் இயல்பை விட மழை குறைந்து காணப்படும்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய கணிப்பில் ‘இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும்’ என கூறப்பட்டுள்ளது.
2018-01-28

