திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் யானை உயிரிழந்தது. கோயிலின் 5-ம் பிரகாரத்தில் கட்டப்பட்டிருந்த பெண் யானை ருக்கு(30) நள்ளிரவு 12.15 மணிக்கு யானை உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானை இரும்பு தடுப்புச் சுவரில் மோதியதில் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. கடந்த 23 வருடங்களாக அண்ணாமலையார் கோயிலில் பெண் யானை ருக்கு பணியாற்றி வந்தது. பெண் யானை ருக்கு அனைத்து புத்துணர்வு முகாமிலும் பங்கேற்றுள்ளது.
2018-03-22

