சென்னை கோபாலபுர இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.
தனிக்கட்சி தொடங்கி, சட்டப்பேரவை தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக, கடந்த டிசம்பர் 31ம் தேதி, நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். இந்நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். அப்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. இதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினி, கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்ததாக தெரிவித்தார். மேலும் அரசியல் பயணம் குறித்து கருணாநிதியிடம் தெரிவித்து ஆசி பெற்றதாகவும் அவர் கூறினார்.

