நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர்சூட்ட வேண்டும் என உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிரிழந்த தியாகி சங்கரலிங்கரனாருக்கு சிலை நிறுவ வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டிருந்த நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் பேறிஞர் அண்ணா என்று தெரிவித்துள்ளார். 1969ம் ஆண்டு ஜனவரி 14ம் நாள் தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வந்ததாகவும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். நமது மாநிலம் தமிழ்நாடு என்று பெயர்சூட்டப்பட்டு தற்போது பொன்விழா ஆண்டு தொடங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொன்விழா ஆண்டை தமிழக அரசு சார்பில் விழாவாக கொண்டாடப்போவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்பதாகவும் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு மட்டுமே பொன்விழாவை நடத்துவதைவிட அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி இந்த விழாவை நடத்துவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டுமென எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் பங்கேற்கும் விதமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொன்விழாவைத் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், வரலாற்றில் நிலைத்திருக்கும் விதமாக இந்த பொன்விழா ஆண்டைக் கொண்டாட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டு உயிரிழந்தார் என்பது வரலாறு என்று குறிப்பிட்டுள்ள அவர், சங்கரலிங்கனார் கண்ட கனவு பேரறிஞர் அண்ணாவால் தான் நனவாகியது என்று தெரிவித்துள்ளார். இந்த வரலாறு எதிர்வரும் தலைமுறையினருக்கும் தெரியும் விதமாக தியாகி சங்கரலிங்கரனாரின் முழு உருவச் சிலையை நிறுவி, சென்னையில் பொன்விழா நினைவுத் தூண் ஒன்றை எழுப்பவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
• சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டிருந்த நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் பேறிஞர் அண்ணா
• தமிழ்நாடு என்ற பெயர் 1969ம் ஆண்டு ஜனவரி 14ம் நாள் நடைமுறைக்கு வந்தது
• நமது மாநிலம் தமிழ்நாடு என்று பெயர்சூட்டப்பட்டு தற்போது பொன்விழா ஆண்டு தொடங்கவுள்ளது
• பொன்விழா ஆண்டை தமிழக அரசு சார்பில் விழாவாக கொண்டாடப்போவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை வரவேற்கிறோம்
• பொன்விழாவை அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி நடத்துவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்
• மக்கள் பங்கேற்கும் விதமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொன்விழாவைத் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்
• வரலாற்றில் நிலைத்திருக்கும் விதமாக பொன்விழா ஆண்டைக் கொண்டாட வேண்டும்
• தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டு உயிரிழந்தார்
• சங்கரலிங்கனார் கண்ட கனவு பேரறிஞர் அண்ணாவால் தான் நனவாகியது
• தியாகி சங்கரலிங்கரனாரின் முழு உருவச் சிலையை நிறுவி, சென்னையில் பொன்விழா நினைவுத் தூண் ஒன்றை எழுப்ப வேண்டும்

