வட தமிழகத்திலும் தென் தமிழகத்திலும் சாதிய கலவரத்தை மூல வைக்க வேண்டும்.
கொங்கு மண்டலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மத கலவரத்தை மூல வைக்க வேண்டும்.
கடலோரம் வாழும் எம் மீனவ சொந்தங்களை சிங்கள இராணுவத்திற்கு இறையாக்க வேண்டும்.
இது தற்செயலாக நடக்கின்ற செயல்கள் அல்ல.தமிழன் தன் வரலாற்றை அறிய கூடாது அறிந்து ஒன்றினைய கூடாது என்பதற்காக இந்த மண்ணில் விளைந்து கிடக்கும் நூற்றாண்டு அரசியல் சூழ்ச்சியே காரணம்.மற்றும் அன்டை மாநிலத்தில் தமிழர் ஒரு வார்டு கவுன்சிலர் ஆவதற்கு ஆயிரப் தடைகள் இருக்கும் பொழுது அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் நம் தமிழ் மண்ணை ஆண்டாண்டு காலமாக ஆண்டதற்கும் தமிழர் தன்னை தானே ஆளாமல் இருந்ததற்கும் இதுவே மூல காரணம்.
தமிழர், தமிழ் மொழி, தமிழ் மண், ஐம்பதாயிரம் ஆண்டுகளாக சந்திக்காத அழிவை இந்த ஒரு நூற்றாண்டில் சந்தித்ததை தமிழர்கள் உணர்ந்து ஆழ சிந்திக்க வேண்டும்.
தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழர்கள் சாதி மதங்களை கடந்து ஒண்றினைந்து அரசியல் எழுச்சியை ஏற்ப்படுத்த வேண்டும்.இந்த எழுச்சியின் மூலமாக தமிழை, தமிழரை,தமிழ் மண்ணை,காப்பாற்ற முடியும்.
சமூக வலைதளத்தின் மூலமாக எம் தமிழ் சமூகத்திற்குள் யார் சாதிய கலவரத்தை மூல முயற்ச்சித்தாலும் முயற்சிப்பவர்கள் மீதும் அவர்களுக்கு பின்புலமாக இருப்பவர்கள் மீதும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் அவர்களிடமும் தமிழக ஆளுநர் அவர்களிடமும் தமிழர்முன்னேற்றப்படை சார்பாக மூன்று தினத்திற்குள் புகார் மனு அளிக்கவுள்ளோம்.
எனவே இது சம்மந்தமாக தமிழ் சமூகத்தில் சாதிய கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய நபர்களின் காணொலி காட்சி மற்றும் எழுத்துப்பூர்வமான பதிவுகளை கீழ்கண்ட வாட்சப் என்னிற்கு அனுப்பும்மாறு அன்பு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

