தமிழகம், புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் மழை நீடிக்கிறது. இந்நிலையில், மத்திய வங்க கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தாழ்வு பகுதி, இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்வதால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவ தொடங்கும் போது சென்னையில் அதிக மழை பெய்யும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2017-10-17

