தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் நிக்கோபார் தீவை ஒட்டியுள்ள பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருவதாகவும், அதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2018-01-14

