தமிழகத்தில் இன்று முதல் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நள்ளிரவில் சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கோடம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், அடையாறு, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

