வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவுகிறது. சில பகுதிகளில் அவ்வப்போது கடும் குளிரும், மூடுபனியும் நிலவி வருகிறது. மேலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை மற்றும், இரவு நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவிலான பனிப்பொழிவு காணப்படுகிறது. உதகை, குன்னூர், கொடைக்கானல், வால்பாறை உள்ளிட்ட மலைப் பகுதிகளிலும் இதுவரை இல்லாத அளவு பனிப்பொழிவு நிலவி வருகிறது. பருவநிலை மாற்றமே இந்த பனிப்பொழிவுக்கு காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அடுத்த சில தினங்களுக்கும் இதே நிலை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2018-01-26

