ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது எடுத்ததாக கூறப்படும் வீடியோவை வெளியிட்டது தொடர்பாக டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு முதல் நாளான கடந்த 20ம் தேதி டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது எடுத்ததாக கூறி, 20 நொடிகள் கொண்ட வீடியோ காட்சியை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோக்களை 10 நாட்களுக்குள் சமர்பிக்கும்படி வெற்றிவேலுக்கு முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வீடியோ வெளியிட்டது குறித்து விளக்கம் அளிக்கவும் சம்மனில் உத்தரவிடப்பட்டுள்ளது.

