ஞாநியின் மறைவு பத்திரிகையாளர்களுக்கு பேரிழப்பு; முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்…

எழுத்தாளர் ஞானியின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட பிரலங்கள் மற்றும் செய்தியாளர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித் துள்ளனர்.

பன்முகத்தன்மையின் காவலராக திகழ்ந்தவர் பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன். பல்வேறு புத்தகங்களை எழுதி மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக, இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.

பிரபல எழுத்தாளர் ஞாநியின் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நாடக ஆசிரியர், கட்டுரையாளர், அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்ட ஞானி அனைவரிடமும் எளிமையாக பழகும் பண்பாளர் என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமது ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளர் ஞாநியின் மறைவை அறிந்த தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பத்திரிகையாளர் ஞானியின் மறைவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், சுயசார்புடன் இயங்கி வந்த ஞாநியின் மறைவு தமிழ்ப் பத்திரிகையுலகிற்கு ஏற்பட்டுள்ள பெரிய பேரிழப்பு என்றும் தெரிவித்துள்ளார். ஞாநியின் மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலக் குறைவால் காலமான பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரனுக்கு தமிழக பாஜக சார்பில் அஞ்சலியும், அவரது குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஞாநி சங்கரன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், தமக்கு சரியென தோன்றியதை பயமின்றி பேசக்கூடியவர், எழுதக் கூடியவர் ஞானி என்றும், ஞானி சங்கரன் மறைவு வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஞாநியின் உடலுக்கு பல்வேறு அரசியில் பிரமுகர்கள் எழுத்தாளர்கள் மற்றும் செய்தியாளார்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஞாநியின் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், திரு. ஞாநியின் மரணத்திற்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள அவர், ஞாநியின் உடல்தானம் போற்றுதலுக்குரியது என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, த.மா.க.தலைவர் ஜி.கே.வாசன், நல்லகண்ணு, முத்தரசன், வேல்முருகன், நடிகர் சங்க தலைவர் நாசர், பார்திபன் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *