சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு ஊர்களில் இருந்து வந்த ஏராளமானோர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த மாவட்டங்களில் தான் மிகவும் அதிகளவிலான தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசின் தொழிலாளர் துறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வரும் தொழில் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்க வேண்டும் என அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட தகுந்த நேரத்தில் ஊருக்கு செல்வதற்காக இன்று சிறப்பு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. . இதனிடையே பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

