சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற உள்ள இடைத்தேர்தல், அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுகவின் பலம் என்ன என்பதை நிரூபிக்கும் என்றும், நடிகர்கள் கட்சி தொடங்கினால் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது தெரியும் என்றும் கூறியுள்ளார்.

