ஜனவரி 7ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று சட்டமன்ற திமுக கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக கொறடா சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 7ம் தேதி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கூட்ட்த்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டம் பற்றியும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

