சென்னை சேப்பாக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெருமுனை விளக்க கூட்டம் நடைபெற்றது.
சென்னை சேப்பாக்கத்தில் எழுச்சித்தமிழரின் கருத்தை தவறாக திரித்து கூறப்பட்டதை மக்கள் மன்றத்தில் தெளிவுப்படுத்த தெருமுனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பூர்விக குடிகாளாகிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் குடிசைகளை கட்டித்தருமாறு தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டது. கட்சியின் வட்டசெயலாளர் கு.பழனி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, மாநில கொள்கை பரப்பு செயலாளர் இயக்குனர் சிபிசந்தர் ஆகியோர் கலந்துக்கொண்டு பேசினர்.
அப்போது பேசிய மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, சென்னைக்கு அருகில் குடிசைகள் கட்டி தருவதாக கூறி ஒடுக்கப்பட்ட மக்களை தமிழக அரசு ஏமாற்றி இருப்பதாக குற்றம்சாடினார். மேலும் பூர்விக குடிகாளாகிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் குடிசைகளை கட்டித்தருமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய மாநில கொள்கை பரப்பு செயலாளர் சி.பி.சந்தர், ஜனநாயகதை காக்கவும் மதவாத சக்திகளை ஒழிக்கவும் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் போன்ற ஜனநாயக சக்திகளை ஆதரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் வரலாற்று உண்மையை ஆதாரத்தோடு கூறிய எழுச்சி தமிழரின் உரையை தவறாக திரித்து கூறுவதில் உள்ளாக்கம் இருப்பதாக இருந்தால் அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் வலியுறித்தினார்.

