அரசியலுக்கு வரும் நடிகர் ரஜினிகாந்த் சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக போராட முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் ஜாதி, மத சார்பற்ற அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும், சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக போராட முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

