ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டியை சந்தித்துப் பேசினார்.
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்துக்கு வைகோ தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வரும் 31-ஆம் தேதி வைகோ தலைமையில் நடைபயணம் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இன்று கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியைச் சந்தித்த வைகோ நியூட்ரினோ தொடர்பான கடிதத்தை கொடுத்து அதன் பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

