குமரி மாவட்டத்தையொட்டிய வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் உள் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், அடுத்த இரண்டு இரவுகளுக்கு நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் தரைப்பனி படர்ந்து காணப்படும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-12-26

