காவிரி மேலாண்மை வாரியம் கோரி சென்னையில் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய மே 17 இயக்கத்தினர் சாஸ்திரி பவன் மீது கற்களையும் காலணிகளை வீசி தாக்குதல் நடத்தியதையடுத்து கைது செய்யப்பட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் பல்வேறு மத்திய அரசு அலுவலகங்கள் உள்ளன. இன்று காவிரி மேலாண்மை வாரியம் கோரி மே 17 இயக்கத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு பிரிவினர் போலீசாரின் தடுப்புகளைக் கடந்து இந்தியில் இருந்த சாஸ்திரி பவன் பெயர்ப் பலகை மீது கற்களையும், காலணிகளையும் வீசி தாக்குதல் நடத்தினர். சாஸ்திரி பவன் வளாகத்துக்குள்ளும் கற்களும், காலணிகளும் வீசப்பட்டன
இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்தி கட்டுப்படுத்த போலீசார் கவனம் செலுத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றவர்களும் சாஸ்திரி பவன் வளாகத்தை நோக்கி முன்னேறி கேட்டுகள் மீது ஏறினர். அவர்களை போலீசார் தடுத்து இறக்கினர்.
இதனைத் தொடர்ந்து மே 17 இயக்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

