ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் படிக்கட்டுகளைத் தாண்டி தண்ணீர் ஓடுவதால், பக்தர்கள் அங்கு நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறக்கப்பட்டதை அடுத்து காவிரியில் கரைபுரண்டோடும் நீரைப் பார்க்க பவானி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் ஏராளமானோர் அலைமோதுகின்றனர்.
அதேபோல் கூடுதுறை கரையில் குளிக்க பக்தர்கள் அதிகம் வருகின்றனர். இந்த நிலையில் பாதுகாப்பு கருதி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் நெருக்கத்தில் சென்று வேடிக்கைப் பார்க்கவோ, மீன்பிடிக்கவோ பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதுறையில் இறங்கி நீராட பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

