ஒகி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரியில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கார் தொண்டு நிறுவனத்தால், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கட்டப்பட்டுள்ள ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டிடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எழுச்சி தமிழர், இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் முத்தலாக் தடை மசோதா குறித்த நிலைப்பாட்டை மத்திய அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பைட்:
ஒகி புயல் பாதித்த குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், புயலால் மாயமான, உயிரிழந்த மீனவர்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் சாதியவாதிகளோ, மதவாதிகளோ காலூன்ற முடியாத வகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு அமைந்துள்ளதாகவும், எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

