புறையோடிப்போன ஊழல், முறைகேடுகளை களைவதற்காக கொடுக்கப்பட்ட கசப்பான மருந்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். மத்திய பிரதேசத்தின் ஜாபூவா பகுதியில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், மத்தியில் 10 ஆண்டுகாலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் செய்ததை, பாஜக தலைமையிலான அரசு நான்கே ஆண்டுகளில் செய்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ், எவ்வித உத்தரவாதங்களும் இன்றி, 14 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். இருபாலருக்கும் கல்வி அளிப்பது, இளைஞர்களுக்கு வருமானத்தை தேடி தருவது, விவசாயிகளுக்கு தேவையான நீர்பாசனத்தை ஏற்படுத்துவது, முதியவர்களுக்கு மருத்துவ உதவி அளிப்பது ஆகியவை, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசின் தாரக மந்திரம் என்றார்.
முடக்கப்பட்டுக் கிடந்த பணத்தை வங்கிகளுக்குள் கொண்டுவரவும், புறையோடிப்போன ஊழல் முறைகேடுகளை தடுக்குவிதமாகவும், கொடுக்கப்பட்ட கசப்பான மருந்துதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

