உலகப் புகழ் மிக்க இயக்குனர் மார்ட்டினுக்கு சாதனையாளர் விருது

உலகசினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்சசிக்கு நியுயார்க் நகரில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.

இத்தாலிய வம்சாவளியினரான மார்ட்டின், வரலாற்று மற்றும் அறிவியல் புனைகதைகளை திரைப்படமாக்குவதில் சிறப்பு மிக்கவர். டாக்சி டிரைவர், ரேஜிங் புல், கேசினோ, கேங்ஸ் ஆப் நியுயார்க், ஏவியேட்டர் உள்ளிட்ட அவருடைய படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகின்றன. அவருக்கு மியூசியம் ஆப் மாடர்ன் ஆர்ட் என்ற அமைப்பின் சார்பில் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *