தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அனல்மின்நிலையம் அமைக்க மத்திய ஊரக மின்மயமாக்கல் கழகத்திடமிருந்து பத்தாயிரத்து 453 கோடி ரூபாய் கடன் பெறும் ஒப்பந்தம், அமைச்சர் தங்கமணி முன்னிலையில் சென்னையில் கையெழுத்தானது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி, உடன்குடி அனல் நிலையத்தில் 660 மெகாவாட் வீதம், ஆயிரத்து 320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்வகையில், 2 அதிநவீன அனல்மின் உலைகள் அமைக்க மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்திற்கு பணியாணை வழங்கப்பட்டிருப்பதாகக் கூறினார். திட்டம் நிறைவேற்றிய பிறகு, தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
2018-01-13

