தமிழகத்தில் வடகிழக்குபருவமழை துவங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. சென்னையில் மாம்பலம், கோடம்பாக்கம், அண்ணாநகர், பாடி, ஆவடி, அயனாவரம், திருவேற்காடு, விருகம்பாக்கம், அமைந்தகரை, வளசரவாக்கம், அசோக்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி இலங்கை அருகே நிலைகொண்டிருப்பதால், தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

