கடந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் பரோடா அணிக்காக பதான் ஆடிய போது அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தான டர்புடலின் அவரது உடலில் இருந்தது கண்டறியப்பட்டது. பதான் உட்கொண்ட இருமல் மருந்தில் டர்புடலின் உட்பொருளாக உள்ளது. கிரிக்கெட் வீரர்கள் முன் அனுமதியின்றி இந்த மருந்தை எடுத்துக் கொள்ள முடியாது. இது தொடர்பாக யூசூப் பதான் அளித்த விளக்கத்தை பி.சி.சி.ஐ. ஏற்றுக் கொண்டுள்ளது. எனினும் அவரை ரஞ்சி தொடருக்கு தேர்வு செய்ய வேண்டாம் என பரோடா அணிக்கு பரிந்துரைக்கப்பட்டள்ளது.
2018-01-10

