ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனன் , டிடிவி தினகரன் இன்று வேட்புமனு தாக்கல்; திமுக வேட்பாளர் மருதுகணேசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு…..

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் மற்றும் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன்ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்சிமன்றக்குழு கூட்டத்தின் முடிவில் அவைத்தலைவர் மதுசூதனன் மீண்டும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து அறிவித்தனர். இதையடுத்து அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். இதனைத்தொடர்ந்து சுயேட்சை வேட்பாளராக ஆர்.கே.நகர் தொகுதியில் களம் இறங்கும் டி.டி.வி. தினகரனும் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார்.

இதனிடையே திமுக வேட்பாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுகரசர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிப்பதாக தெரிவித்தார். மேலும் பண பட்டுவாடவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே வட சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திமுக வேட்பாளர் மருது கணேசுக்கு ஆதரவாக வீதி வீதியாக பிரசாரம் மேற்கொள்ளபோவதாக மாவட்ட தலைவர் திரவியம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *