ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு முக்கிய அமைச்சர்கள் தான் காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் தோல்வி அடைந்தார். இந்நிலையில் ஆர்.கே.நகர் தோல்விக்கு முக்கிய அமைச்சர்கள் தான் காரணம் என்றும், தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

