ஆப்பிரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர்மோடியை, வெளியுறவுத்துறை அமைச்சர்சுஷ்மா சுவராஜ் வரவேற்றார்.

ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி, உகாண்டா, ருவாண்டா நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவுக்கும், அந்த நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதனை தொடர்ந்து ஜோகன்ஸ்பெர்க் நகரில் நேற்று நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற அவர், பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளான பிரேசில், ரஷ்யா, சீனா உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

இறுதியாக துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகனை சந்தித்த மோடி, 2வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து தனி விமானம் மூலம் டெல்லி திரும்பிய பிரதமர் மோடியை, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேரில் சென்று வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *