ஆந்திர மாநிலத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் அரசியல் சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் மதவாதத்தை எதிர்த்தும் அரசியல் சட்ட அமைப்பு பாதுகாப்பதற்கும் மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்மையில் மாநாடு நடைபெற்றது. இதேபோல் தற்போது ஆந்திராவில் உள்ள மதனப்பள்ளியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு இன்று நடைபெறுகிறது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்குகிறார். இதில் ஆந்திர மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிக்கள் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர்.

