திருச்சி அரியமங்கலம் அருகே பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. ஜெகநாதபுரத்தில் உள்ள இந்தக் கிடங்கில் நள்ளிரவில் பற்றிய தீ சற்றுநேரத்தில் கொளுந்துவிட்டு எரிந்தது.
4 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடோனில் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு கூச்சலிட்ட எதிர் வீட்டுக்காரரான சரோஜா என்பவருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

